இலங்கை ஜனாதிபதிக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதாக குற்றஞ்சாட்டப்படும் இலங்கை அரசியலமைப்பின் 18 வது திருத்தச் சட்டமூலம் புதனன்று நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு கல்லூரிகளில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரபல தமி்ழ்த் திரைப்பட நடிகர் முரளி, சென்னையில் மாரடைப்பால் காலமானார்.
ரஷியாவின் பயணித்த ஒரு விமானம் நடுவானில் செயலிழந்த நிலையில்,எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் தரையிறங்கியது ஒரு அதிசயம் என வான் போக்குவரத்து வல்லுநர்கள் வர்ணித்துள்ளனர்.
இலங்கை அரசியலமைப்பில் செய்யப்படவுள்ள திருத்தத்துக்கு பொது வாக்கெடுப்பு தேவையில்லை என்று இலங்கை உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
அமெரிக்காவின் உள்ள ஒரு சிறிய கிறித்தவ குழு ஏற்கனவே அறிவித்தபடி புனித குரானின் பிரதிகளை எரித்தால், அமெரிக்கவுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என அமெரிக்காவின் முக்கியத் தளபதி எச்சரித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவரிடம் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாக பிபிசிக்கு நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலகிலேயே முதன் முறையாக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 1250 வருடங்கள் பழமையான ஆலயம் ஒன்று தமிழ்நாட்டில் புதுப்பிக்கப்பபட்டுள்ளது
ஆஸ்திரேலியாவில் நலிந்து வருகின்ற ஒட்டக வளர்ப்புத் தொழில்துறைக்கு ஊக்கம் தரும் நோக்கில் அத்தொழில்துறைக்கு அரசாங்கம் ஏற்றுமதி மானியம் வழங்கியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை தொடர்புபடுத்தி ஊழல் சர்ச்சை நிலவி வரும் நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளைக் கையாளும் வல்லமை தங்களுக்கு உண்டு என ஐசிசி தெரிவித்துள்ளது.
தமிழ் மக்கள் நடைமுறைச் சாத்தியமான விடயங்களையே கோருகின்றனர் என்று படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் அமைச்சர் தேவானந்தா கூறியுள்ளார்.
சவுதி வீட்டார் தனது உடலில் ஆணியை அறைந்து சித்தரவதை செய்ததாக ஆரியவதி என்ற இலங்கைப் பெண் கூறும் குற்றச்சாட்டுகள் நம்பும்படியாக இல்லை என சவுதி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிகார் மாநிலத்தில் கடத்திச் செல்லப்பட்ட நான்கு காவலர்களில், ஒருவரை கொன்றுவிட்டதாக மாவோயிஸ்டுகள் அறிவிப்பு.
ஆனால் காவல்துறை இதை உறுதிப்படுத்தவில்லை
முகாம்வாசிகளின் நன்மை கருதியே வவுனியா மனிக்பாம் முகாமின் நான்காவது வலயத்தில் உள்ள மக்களை இடம் மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் விளக்கம்.
அணுகுண்டுப் பரிசோதனைக்கு எதிரான முதலாவது சர்வதேச தினத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆகஸ்ட் 29 ஆம் திகதி அனுஷ்டிக்கின்றது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இந்தியப் பொருளாதாரம் 8.8 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பெறப்பட்ட அதிக அளவிலான கலாண்டு வளர்ச்சி இதுவேயாகும்
தமிழக அரசின் கலைஞர் வீட்டு வசதித் திட்டம் மற்றும் முல்லைப் பெரியார் அணை பிரச்சினை குறித்து தினமலர் நாளேடு தவறான தகவல்கள் வெளியிட்டிருப்பதாக தமிழக அரசு புகார்.
உறையுகத்து குகைக் கரடிகள் அழிந்து போனமைக்கு மனிதனே காரணம் என சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தின் குடியுரிமை தொடர்பான சர்ச்சை காரணமாக அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுப்பதற்கான நிகழ்ச்சி ரத்தானதற்காக மத்திய அமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நிறுவனங்கள் சில யோகாவில் சில மாற்றங்களை கொண்டு வந்து அவற்றுக்கு காப்புரிமை பெற முயற்சிப்பதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் நிலைப்பாடு தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் உரிமைக்காக சமூகத்திடம் போராடிய பெண்ணொருவர், தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியான அச்சமூகத்தினர் பலருக்கு உதவியுள்ளார்.
மும்பையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் தீ ஏற்பட்டதாக கூறி ஏறி களேபரத்தில் 26 பயணிகள் காயம். விமானத்தின் ஊழியர்கள் பணிநீக்கம்.
இலங்கையில் செப்டம்பர் மாதம் எட்டாம் தேதியன்று சட்டமாக்கப்படும் அரசியலமைப்பு மாற்றங்கள் ஜனாதிபதிக்கு அதிகாரத்தை கணிசமாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இலங்கை அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்ட, முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்திருந்த 508 இளைஞர் யுவதிகள் சனிக்கிழமையன்று அவர்களது பெற்றோரிடம் கையளிக்கப்பட்டார்கள்.
எங்கு தொழுகை நடத்துவது என்பது தொடர்பில் முஸ்லிம் உட்பிரிவுகள் இடையே மோதல். திருவாரூர் அருகே பள்ளிவாசல் இமாம் உட்பட இருவர் துப்பாக்கி சூட்டில் பலி.
நேபாளத்தில் பிரதமர் பதவிக்கான தேர்தல் ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ள நிலையில், நேபாள மாவோயிஸ்டுகள் கம்யூனிஸ்ட் கட்சி சர்ச்சையில் மாட்டிக் கொண்டிருக்கிறது.
காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள் பூகோள குறியீட்டுச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் காப்புரிமை போன்ற ஒரு பாதுகாப்பு அந்தப் புடவைகளுக்கு கிடைக்கிறது
இந்தியாவின் பாரம்பரிய விலங்கினமாக யானை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.அதற்காக வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் அ இ அ தி மு க கட்சித் தொண்டர்கள் மூன்று பேருக்கான மரண தண்டனையை இந்திய உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.
சூதாட்டங்களில் ஈடுபட்டார்கள் என்கிற குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கும் பாகிஸ்தானின் கிரிக்கெட் வீரர்கள் மூவர் எஞ்சியிருக்கும் போட்டிகளில் பங்கு பெறமாட்டார்கள்
பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் கிரிக்கெட் ஆட்டத்தில் குறிப்பிட்ட நேரத்தில் 'நோ-பால்கள்' வீசியது தொடர்பாக எழுந்துள்ள பந்தய ஊழல் குற்றச்சாட்டுகளை பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
சவுதி அரேபியாவில் கொடுமைகளுக்கு உள்ளாகி இலங்கை திரும்பிய வீட்டுப் பணிப்பெண்ணி்ன் உடலில் இருந்து 18 ஆணிகளையும் ஊசிகளையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
அன்னை தெரசாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டுள்ளன. 1979 ஆம் ஆண்டு நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியலமைப்பு திருத்தங்களுக்காக அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.
இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் போர் நிறுத்தம் ஏற்படுவதைத் தடுத்தது வைகோதான் என்ற குற்றச்சாட்டினை வைகோ மறுத்திருக்கிறார்.
ஒரிசாவில் வேதாந்தா நிறுவனம் மேற்கொள்ள விருந்த சுரங்கப் பணிகளுக்கான அனுமதிகளை வழங்க முடியாது என மத்திய சுற்றுச் சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முதல்தரமான நகரங்கள் என்று வரையறுக்கப்பட்ட 423 நகரங்களில் 39 நகரங்களில் மட்டும் தான் தரமான தண்ணீர் கிடைப்பதாக நாடாளுமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பினை தொடர்ந்து அங்கு ஹெலிகாப்டர்களின் தேவை மிக அத்தியாவசியமாகிறது.
தமிழக காவல் துறைத் தலைவர் பதிவிக்கு லத்திகா சரண் அவர்களை நியமித்தது தொடர்பான வழக்கில் தமிழக அரசு தவறான தகவல்களை கொடுத்துள்ளது என்கிறார் வீரப்பனை கொன்ற அதிரடிப் படையின் தலைவராக பணிபுரிந்த கே விஜயகுமார்.
இலங்கை அரசு கொண்டுவரவுள்ள 18வது அரசியல் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களிப்பது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
கல்வி கற்பதற்காக பிரிட்டனுக்குள் வந்துள்ள வெளிநாட்டு மாணவர்களில் ஐந்தில் ஒரு பங்கினர், வந்து ஐந்து வருடங்களாகியும் திரும்பவில்லை என புதிய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
தமிழக அகதி முகாம்களில் இருந்து முறையான அனுமதியின்றி இலங்கை அகதிகளை ஆஸ்திரேலியா அனுப்ப முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு பல்கலைகழகத்தில் தஞ்சம் அடைந்திருந்து பின்னர் விசாரணை என்று சென்று காணாமல் போனவர்களை உறவினர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.
Tamil ▼